1,15,000 ஒன்ராரியோ வாசிகள் தமது இல்லங்களுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.
சனி, ஞாயிறு தினங்களில் ஒன்ராரியோவின் பல பகுதிகளில் நிகழ்ந்த உறைபனிப் பொழிவால் மின்கம்பங்கள், மரங்களில் ஏற்பட்ட முறிவுகள் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டது.
வண்டி ஓட்டுனர்களும் பாதசாரிகளும் மிகுந்த கவனத்துடன் வீதி போக்குவரத்தை மேற்கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.