Tuesday, July 29, 2025 4:21 am
உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய உற்பத்தியிலிருந்து விவசாயிகள் விலகுவதால் எதிர்காலத்தில் கடுமையான நெருக்கடி நிலை ஏற்படக்கூடும் என கெப்பட்டிபொல பொருளாதார மத்திய நிலையத்தின் வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.
விவசாயிகள் இந்த பயிர்களிலிருந்து விலகுவதன் மூலம், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் என்பன வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலை உருவாகும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

