Sunday, March 1, 2026 2:21 pm
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், ஈரானிய ராணுவத்தின் உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டதை ஈரானிய அரசு ஊடகங்களும், சர்வதேச ஊடகங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.
கொல்லப்பட்ட முக்கிய தலைவர்கள்:
அப்துல் ரஹீம் மௌசவி
(ஈரானிய ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி)
அஜீஸ் நசீர்சாதே
(ஈரானின் பாதுகாப்பு அமைச்சர்)
முகமது பக்பூர்
(இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தரைப்படைத் தளபதி — Islamic Revolutionary Guard Corps (IRGC))
அலி ஷாம்கானி
(அதியுயர் தலைவரின் பாதுகாப்பு ஆலோசகர்)
இந்தத் தாக்குதல், ஈரானிய அதியுயர் தலைவர் அயத்துல்லா அலி கொமேனி அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட பாதுகாப்புக் குழுக் கூட்டத்தை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் அயத்துல்லா அலி கொமேனியும் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான
Islamic Republic News Agency (IRNA)
Tasnim News Agency
இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பல தளபதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களின் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் தற்போது இஸ்ரேல், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

