உடவலவை தேசிய பூங்காவிற்குள் கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சா தோட்டத்துடன் சம்பந்தப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
பனஹடுவ தளப் பாதுகாப்பு அலுவலகத்தைச் சேர்ந்த வனவிலங்கு அதிகாரிகள் நேற்று (17) மேற்கொண்ட ரோந்துப் பணியின் போது, இந்த கஞ்சா தோட்டம் கண்டுபிடிக்கப்பட்டதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. கஞ்சா செடிகள் சுமார் மூன்று அடி உயரம் வரை வளர்ந்திருந்தன. அந்த இடத்தில் கஞ்சாவுடன் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும் இன்று வியாழக்கிழமை (18) எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது சந்தேக நபர்கள் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். ஒரு நபருக்கு ரூ. 500,000 பிணை விதித்த்த நீதிபதி ஒக்டோபர் 02 ஆம் திகதி குற்றப்பத்திரிகையை சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.
அதிகாரிகள் ஒரு சட்டவிரோத துப்பாக்கி, வெடிமருந்துகள், தோட்டத்திற்கு நீர்ப்பாசனம் செய்ய பயன்படுத்தப்படும் ஒரு தண்ணீர் பம்ப், பம்பிற்கு மின்சாரம் வழங்க பயன்படுத்தப்படும் ஒரு சூரிய சக்தி பேனல் உட்பட பல உபகரணங்களையும் பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றினர்.