மருத்துவ சோதனைகள் மூலம் வயதாக ஏற்படும் வியாதிகளை கண்டுபிடித்து மருந்துகளை எடுத்துக் கொண்டு ஆயுளை நீடிப்போர் ஒரு வகை.
உடற்பயிற்சி, யோகா போன்ற பயிற்சிகள் மூலம் வயதானாலும் நோய்களைப் பற்றிய கவலையின்றி ஆரோக்கியமாக இருப்போர் இன்னோர் வகை.
வயதாக நமது தசைகளின் அளவும் பலமும் குறைந்து கொண்டே போகிறது. இதனை காத்துக் கொள்ள வேண்டிய தேவை ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ளது.
பலராலும் நன்கு அறியப்பட்ட, அமரிக்காவில் இருக்கும் லாப நோக்கற்ற அமைப்பான மயோ கிளினிக் வெளியிட்டுள்ள அறிக்கையில், எமது தசைகளின் வலுவும் தாங்கும் ஆற்றலும் நம்மால் செய்யக்கூடிய Push -ups மூலம் அளவிடலாம் என்கின்றனர். வெவ்வேறு வயதெல்லைகளில் இருக்க வேண்டிய இதன் எண்ணிக்கையையும் வெளியிட்டுள்ளனர்.

Push- ups இல் பலவகை உண்டு. ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் சுவரோடு கைகளை பதித்து நின்ற நிலையில் செய்யலாம். படிப்படியாக கடின நிலைக்கு முன்னேறலாம்.