உக்ரைனில் நடைபெறும் போரை முடிவுக்குக்கொண்டுவரும் நோக்கில் அமெரிக்கா வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபினியோ, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் ஆகியோர் சவூதியில் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சு வார்த்தைக்கு உக்ரைன் அழைக்கப்படவில்லை.
நான்கு மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தையில் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், நல்லுறவை மேம்படுத்துவதற்கும் பணியாற்ற இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. விரைவில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் துருக்கிக்கு சென்றுள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, அமெரிக்கா-ரஷியா ஆகியவற்றுக்கிடையேயான பேச்சுவார்த்தை குறித்து கூறியதாவது;
“.. சவுதி அரேபியாவில் நடந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் பங்கேற்காததால் அதில் எடுக்கப்படும் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட எந்தவொரு பேச்சு வார்த்தையும் நியாயமானதாக இருக்க வேண்டும்.
பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வந்த துருக்கி உட்பட ஐரோப்பிய நாடுகள் இடம்பெற வேண்டும். எங்கள் முதுகுக்குப் பின்னால் யாரும் எதையும் முடிவு செய்யக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம்.
உக்ரைனில் போரை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவது என்பது குறித்து உக்ரைன் இல்லாமல் எந்த முடிவும் எடுக்க முடியாது. சவூதி அரேபியாவுக்கு செல்ல முடிவு செய்திருந்தேன். ஆனால் அந்த பயணத்தை மார்ச் 10ம் திகதி வரை ஒத்திவைத்துள்ளேன்” என்றார்.
ஏகன் மீடியா,ஏகன்,ஜெலென்ஸ்கி,உக்ரைன்,ரஷ்யா,புட்டின்,அமெரிக்கா,ட்ரம்ப்