ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரில் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வந்த அமெரிக்கா ஆயுதங்கள், இராணுவ உதவிகளை செய்து வந்தது. அதேபோல் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளும் ஆதரவு அளித்தன. இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற ட்ரம்ப், உக்ரைன் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து விலகினார். ரஷ்யாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
உக்ரைனில் உள்ள அரிய வகை கனிமங்களை அமெரிக்கா எடுத்து கொள்வது தொடர்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அமெரிக்காவுக்கு சென்றார்.அப்போது ட்ரம்ப்-ஜெலன்ஸ்கி நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ரஷ்யாவுடன் போர் நிறுத்தத்தை டிரம்ப் வலியுறுத்திய நிலையில் அதை ஜெலன்ஸ்கி ஏற்க மறுத்தார். இதையடுத்து இந்த சந்திப்பு பாதியில் முடித்துக் கொள்ளப்பட்டது. மேலும் கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமேற்பாடு இரத்து செய்யப்பட்டதால் வெள்ளை மாளிகையில் இருந்து ஜெலன்ஸ்கி வெளியேறினார்.
இந்த நிலையில் உக்ரைனுக்கு அளிக்கப்பட்டு வரும் அனைத்து இராணுவ உதவிகளையும் நிறுத்த ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, போரில் உக்ரைனுக்கு அனுப்பப்பட காத்திருக்கும் பில்லியன் கணக்கான டொலர் மதிப்பு உள்ள ரேடார்கள், வாகனங்கள், வெடிமருந்துகள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுத உதவிகள் விநியோகத்தை நிறுத்தும் முடிவு தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது என்றார். இந்த தகவலை வாஷிங்டன் போஸ்ட் ஊடகம் மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.