ஈஸ்டர்ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 245 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக ஏஜி நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத , தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, 245 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈடு வழங்கப்படுவதை அவதானிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட 12 மனுக்கள் உச்ச நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இது தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ, எஸ்.துரைராஜா, ஏ.எச்.எம் ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.