Sunday, March 1, 2026 8:19 am
ஈரானிய அரசு ஊடகம் இப்போது நாட்டின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கொமேனி உண்மையில் கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.
சனிக்கிழமை அதிகாலையில் அவர் தனது அலுவலகத்தில் கொல்லப்பட்டதை அடுத்து, ஈரானில் 40 நாட்கள் பொது துக்கமும், ஏழு நாட்கள் பொது விடுமுறையும் கடைப்பிடிக்கப்படும் என்று அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சனிக்கிழமை காலை தெஹ்ரானில் உள்ள உச்ச தலைவரின் வளாகத்தில் குறைந்தது நான்கு கட்டிடங்களைத் தாக்கிய அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் கொமேனி கொல்லப்பட்டதாக டொனால்ட் ட்ரம்ப் சமூக ஊடகங்களில் பல மணி நேரத்திற்கு முன்பு அறிவித்தார்.அதை இப்போது தஸ்னிம் ,ஃபார்ஸ் செய்தி நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
சமீபத்திய தாக்குதல்களில், கமேனியின் மகள், மருமகன் மற்றும் பேரன் ஆகியோர் உயிரிழந்ததாக ஈரான் அரசு செய்தி நிறுவனமான பார்ஸ் தெரிவித்துள்ளது. இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் தொடர்புடைய பார்ஸ், கமேனி மருமகளும் தாக்குதலில் உயிரிழந்ததாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.. ஈரானின் அரசியலமைப்பின் கீழ், 88 மூத்த இஸ்லாமிய அறிஞர்களைக் கொண்ட சக்திவாய்ந்த மதகுருமார் அமைப்பான நிபுணர்கள் சபை தான், அடுத்த யார் தலைவர் என்பதைத் தேர்வு செய்யும். கமேனியின் மகள் உயிரிழந்துவிட்ட நிலையில், அவரது மகன் அடுத்து பவருக்கு வரக்கூடும் என சொல்லப்படுகிறது. இருப்பினும், அவரது நிலை குறித்தும் உறுதியாகத் தெரியாததால், அடுத்த கட்ட முடிவுகளை எடுக்க விரைவில் நிபுணர்கள் சபை கூடவுள்ளது.

