Saturday, February 28, 2026 8:17 pm
அணுசக்தி தொடர்பாக ஈரானிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் அந்நாட்டின் மீது இஸ்ரேல் , அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளும் போர்தொடுத்திருக்கிறது. வான் வெளி தாக்குதல்களால் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பல கட்டிடங்கள் தீப்பிடித்து எரிகிறது. அந்த நகரம் முழுவதும் குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்கிறது. ஈரான் ஜனாதிபதி மாளிகையிலும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானில் உள்ள ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள மினாப் நகரில் பெண்கள் தொடக்கப்பள்ளியில் படித்துவந்த 40 மாணவிகள் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், பல மாணவிகள் காயமடைந்துள்ளனர்.

