இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக இலண்டன் சென்றுள்ளார்.
அப்போது அவரின் மீது காலிஸ்தானி தீவிரவாதிகள் குழு தாக்குதல் நடத்த முயற்சித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
முன்னதாக சாத்தம் ஹவுஸ் வெளியே ஜெய்சங்கருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த காலிஸ்தானி குழு கூடிய கோஷங்கள் எழுப்பியது. கலந்துரையாடலுக்குப் பிறகு ஜெய்சங்கர் சாத்தம் ஹவுஸ் இடத்திலிருந்து வெளியேறும்போது, அந்த கூட்டத்திலிருந்து ஒரு நபர் அவரது காரை நோக்கி ஓடிச் சென்று பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் இந்திய தேசியக் கொடியைக் கிழித்தார். பொலிஸார் அவரை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தின் காணொளி தற்போது இணையத்தில் பரவி வருகிறது