இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு தொகையை வென்றவருக்கு 47 கோடி ரூபாய் மதிப்புள்ள காசோலையை தேசிய லொத்தர் சபை வழங்கியுள்ளது.
மெகா பவர் 2210 ஆவது சீட்டிழுப்பில், 47 கோடியே 45 இலட்சத்து 99 ஆயிரத்து 422 ரூபா சூப்பர் பரிசுடன் கூடிய வெற்றி பெற்ற லொட்டரி சீட்டை, கொக்கரெல்ல பகுதியைச் சேர்ந்த விற்பனை முகவரான எச்.ஏ. ஜானகி ஹேமமாலா விற்பனை செய்துள்ளார்.
தேசிய லொத்தர் சபை ஏற்பாடு செய்த விடேச நிகழ்வு ஒன்றில் கொழும்பு மேயர் வ்ராய் கெலி பல்தசாரினால் லொட்டரி பரிசை வென்ற நபருக்குரிய காசோலை உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.
துணை மேயர் ஹேமந்த வீரகோன், தேசிய லொத்தர் சபை தலைவர் M.D.C.A. பெரேரா மற்றும் பொது முகாமையாளர் ஏ.எம். ஆரிஃப் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
Trending
- 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு எனர்ஜி பானங்கள் தடை
- சிறப்பு முத்திரை வெளியிடப்பட்டது
- வடமத்திய மாகாணத்தில் விவசாயத்தை மேம்படுத்த புதிய ஆய்வகம்
- பொலிஸ் நிலையத்தில் வடிகட்டிய குடிநீர்
- சுகாதார வைத்திய அதிகாரி இஸ்ஸடீனுக்கு பிரியாவிடை
- ட்ரம்புக்கு எதிராகக் கைகோர்த்த தலைவர்கள்
- விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்படவில்லை : நாமல் ராஜபக்ஷ
- ஞாயிற்றுக்கிழமைகளில் காலை வகுப்புகளுக்கு தடை