Friday, January 31, 2025 6:20 am
6.1 மில்லியன் ரூபாயை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் நேற்று வியாழக்கிழமை மாலபேயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிதிக் குற்றச்சாட்டுத் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

