Friday, February 28, 2025 4:58 am
சிவகார்த்திகேயன், ரவி மோகன் ஆகியோர் நடிக்கும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மதுரையில் நிறைவடைந்துள்ளது. படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறும் என்று இயக்குனர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.
முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாகவும், படம் அழகாக உருவாகி வருவதாகவும் பகிர்ந்து கொண்ட இலக்குநர் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக விரைவில் இலங்கைக்கு புறப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

