9வது சர்வதேச நீர் மாநாடு , ஆராய்ச்சி மாநாடு ஆகியன 19௨0 திகதிகளில் நீர் மற்றும் சுகாதாரத்திற்கான சிறப்பு மையத்தில் நடைபெறும்.
“புதுமையான ஆராய்ச்சி, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் கழிவு நீர் மேலாண்மை” என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் இடம்பெறும் என்றும், 600க்கும் மேற்பட்ட உள்ளூர் , சர்வதேச பங்கேற்பாளர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 22 ஆம் திகதி உலக நீர் தினத்தை முன்னிட்டு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் (NWSDB) 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் மார்ச் 21 ஆம் திகதி ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.