Thursday, June 12, 2025 10:13 am
இலங்கையில் கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்டு இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக வடமேல் மருத்துவ பீடத்தின் தலைமை மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர தெரிவித்துள்ளார்.
இந்த கொவிட் தொற்று மிகக் குறைந்த தீவிரத்தன்மை கொண்டதனால் இதன் தாக்கம் மிகக் குறைவாகக் காணப்படும் எனவும் 65 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கும் இது தீவிரமாக இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

