நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் கொத்மலை – கெரண்டி எல்லை பகுதியில் இன்று அதிகாலை பேருந்து விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
இவ் விபத்தில் 11 பேர் கொல்லப்பட்டதுடன் 37 பேர் காயமடைந்துள்ளனர்.
குருநாகலிலிருந்து கதிர்காமம் நோக்கிச் சென்ற பேருந்து செங்குத்தான பள்ளத்தாக்கில் விழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்தவர்கள் கொத்மலை மற்றும் நுவரெலியா வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
பொலிஸார் மற்றும் உள்ளூர்வாசிகள் உட்பட அவசரகால மீட்புக் குழுக்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மலைப்பாங்கான நிலப்பரப்பில் கூர்மையான வளைவில் பயணிக்கும் போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.