இலங்கையின் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் அளவிடப்படும் முதன்மை பணவீக்க வீதம், ஓகஸ்ட் 2025 இல் 1.2% ஆக இருந்ததிலிருந்து செப்டம்பர் 2025 இல் 1.5% ஆக சற்று அதிகரித்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
உணவுப் பணவீக்க வீதம் ஓகஸ்ட் 2025 இல் 2.0% உடன் ஒப்பிடும்போது, செப்டம்பர் 2025 இல் 2.9% ஆக உயர்ந்துள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.