உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளுக்கும் புதிய வரிப்பட்டியலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று அறிவித்திருந்த நிலையில் இந்த வரி நாளை மறுநாள் (05) முதல் அமுல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.
இதில் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 44%வரியையும் விதித்துள்ளார்.
மேலும், வியட்நாமுக்கு 46% சீனாவுக்கு 34%இந்தியாவுக்கு 26% பிலிப்பைன்ஸுக்கு 17%மற்றும் சிங்கப்பூருக்கு 10%வரி விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவால் ஆசிய நாடுகளில் அதிக வரி விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது.
இதுவரை, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 12.2% வரியை விதித்துள்ள நிலையில், இந்த புதிய வரி விதிப்பு நாட்டின் ஏற்றுமதித் துறையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
2024 ஆம் ஆண்டில், அமெரிக்கா இலங்கையிலிருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.