இலங்கையின் சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பதுளை , நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகள் ,அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மண் சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளையில் பசறை, ஹாலி-எல, பதுளை, கண்டகெட்டிய, ஊவா பரணகம, மீகஹகியுலா ,சொரணத்தோட்ட பிரதேச செயலகப் பிரிவுகள்
நுவரெலியாவில் வலப்பனை பிரதேச செயலகப் பிரிவு, அதைச் சுற்றியுள்ள பகுதிகள் ஆகியவற்றுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.