இரண்டாம் உலகப் போரின் வெடிக்காத குண்டுகள் ஜேர்மனியின் கொலோனில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து 20,000 பேர் வெளியேற்றப்பட்டார்கள்.
இரண்டாம் உலகப் போரின் மூன்று குண்டுகளை நிபுணர்கள் செயலிழக்கச் செய்ய முயற்சிக்கும் நிலையில், ஜெர்மன் நகரமான கொலோனில் சுமார் 20,000 பேர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள்.
போருக்குப் பிந்தைய மிகப்பெரிய வெளியேற்றம் இதுவாகும், மேலும் திங்களன்று இரண்டு 1,000 கிலோ , 500 கிலோ அமெரிக்க சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குண்டுகளின் அளவு 1,000 மீற்றர் அபாய மண்டலத்தை சுற்றி வளைத்து மூட வேண்டும் என்பதாகும்.
புதன்கிழமை காலை 8 மணி முதல், கொலோனின் பழைய நகரம் மற்றும் டியூட்ஸ் பகுதிகளில் உள்ள வணிகங்கள் , வீடுகள் காலியாக உள்ளதா என்பதை அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று சரிபார்த்தார்கள்.
9 பாடசாலைகள், 58 ஹோட்டல்கள், ஒரு மருத்துவமனை, பிரதான நகர மண்டபம், கொலோனின் புகழ்பெற்ற யுனெஸ்கோ-பட்டியலிடப்பட்ட கதீட்ரலுக்கு அருகிலுள்ள பகுதி ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டன.
பாதிக்கப்பட்டவர்களுக்காக இரண்டு தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் உலகப் போரின் போது கொலோன் மீது 1.5 மில்லியன் குண்டுகள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில், நகரத்தில் 31 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன, 17 முறை மக்கள் வெளியேற்றப்பட்டனர். 36,000 க்கும் மேற்பட்ட மக்களை பாதிக்கப்பட்டனர்.