வசாவிளான் – பலாலி வீதி இன்று காலை முதல் திறக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை கடற்கரை நோக்கி செல்கின்றது.
இவ் வீதியானது பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ளது.
இராணுவக் குடியிருப்பினூடாக செல்லும் வீதியாகும்.
கடந்த 34 வருடங்களின் பின்நீண்ட போராட்டங்களுக்குப் பிறகே திறக்கப்பட்டது.
இன்று காலை 6.00 மணியளவில் முழுமையாக திறந்து வைக்கப்பட்டது.
இவ் வீதி மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்ட போதிலும் குறித்த பகுதியில் செல்லும் பயணிகளுக்கு மிக கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
01. குறித்த வீதி காலை 06:00 – மாலை 05:00 வரை மாத்திரமே மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்படும்.
02. வீதியினுள் பயணிக்கும் வாகனங்கள் இடையில் நிறுத்துதல், திருப்புதல் தடைசெய்யப்பட்டுள்ளது.
03. வீதியில் பயணிக்கும் சந்தர்ப்பத்தில் வீதியின் இருபுறமும் புகைப்படம் எடுத்தல் ஒளிப்பதிவு செய்தல் போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளது.
04. நடைபயணம் மற்றும் பேருந்து தவிர்ந்த பாரவூர்திகள் குறித்த வீதியூடாக செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
05. ஆகக்கூடியது 40 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே வாகனங்களை செலுத்த முடியும்.
06. வாகனத்தை செலுத்தும் சாரதிகள் மற்றும் அனைவரும் தங்களை அடையாளப்படுத்தும் ஆவணங்களை பயணத்தின்போது வைத்திருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை மீறுவது சட்டரீதியான குற்றமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
