பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய உலருணவுப் பொதிகள் பொது மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ளது.
இன்று முதல் 13ஆம் திகதி வரை பெற்றுக்கொள்ளலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
லங்கா சதொச விற்பனை நிலையம் மற்றும் COOPFED விற்பனை நிலையங்களின் ஊடாக நிவாரணப் பொதியைப் பெற்றுக் கொள்ளலாம்.
5,000 ரூபா பெறுமதியான உணவு பொதியை 2,500 ரூபாவுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.