உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படவுள்ள சகல பாடசாலைகளும் உரிய அதிகாரிகளிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் புதன்கிழமை அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சு கூறியுள்ளது.
அதேவேளை, அனைத்து அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் பணிக்குழாமினருக்கும், மாணவர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.