இன்றிரவு வானத்தைப் பார்ப்பவர்களுக்கு “இரத்த நிலவைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும், முழு சந்திர கிரகணத்தின் போது முழு நிலவு சிவப்பு, ஒரேஞ்ச் , மஞ்சள் நிற நிழல்களில் வண்ணமயமாகக் காட்சியளைக்கும்.
இந்த மாதத்தின் முழு நிலவு , பார்வையாளரின் நேர மண்டலத்தைப் பொறுத்து, இன்றிரவு, மார்ச் 13 ஆம் திகதி தாமதமாகவோ அல்லது நாளை அதிகாலை, மார்ச் 14 ஆம் திகதி நிலவு அதிகாலையிலோ பூமியின் நிழலைக் கடந்து செல்லும். இது அமெரிக்காவிலும் மேற்கு அரைக்கோளத்தின் பிற இடங்களிலும் உள்ள மக்களுக்குத் தெரியும்.