இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி எதிர்ப்பு பதாகையில் கையொப்பமிடும் போராட்டம் ஒன்றினை சம உரிமை இயக்கம் இன்று மட்டக்களப்பில் ஆரம்பித்து வைத்தது.
காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கு, இன்னொரு அடக்குமுறைச் சட்டங்கள் வேண்டாம், பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துசெய் அனைத்து தேசிய இனங்களுக்கும் சம உரிமைகளை உறுதி செய்யும் அரசியலமைப்பிற்காகப் போராடுவோம் என்ற தலைப்பில் எதிர்ப்பு பதாதையில் கையொப்பமிடும் போராட்டம் ஒன்றை சம உரிமை இயக்கம் மட்டக்களப்பு பஸ்தரிப்பு நிலையத்தில் இன்று (12) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மாவட்ட இணைப்பாளர் கிருபாகரன் தலைமையில் எதிர்ப்பு பதாதையில் கையொப்பமிடும் போராட்டம் இன்று காலை 11.00 மணிக்கு மட்டக்களப்பு பிரதான பஸ் நிலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஈரோஸ் ஜனநாயக முன்னணி கட்சியின் தலைவர் இராஜேந்திரா, சம உரிமைகள் இயக்க உறுப்பினர்கள், உட்பட பலர் கலந்து கொண்டு எதிர்ப்பு பதாதையில் கையொப்பமிடும் நடவடிக்கையை ஆரம்பித்து வைத்து துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.