2025ல் முதல் மூன்று மாதங்களிலும் விபத்துக்களில் உயிரிழந்தவர்கள் மாத்திரம் 590க்கும் அதிகமாக காணப்படுகின்றனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்துப் பிரிவின் தலைவரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான இந்திக ஹபுகொட நேற்றைய தினம் (3) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் வீதி விபத்துகளில் சராசரியாக தினமும் 7 முதல் 8 பேர் வரை இறக்கின்றனர் என்று சுட்டிக்காட்டினார்.
மேலும் இந்த ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் வரை 565 மரண விபத்துக்கள் பதிவாகியுள்ளது.
இதன் விளைவாக 592 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழ்-சிங்கள புத்தாண்டு காலத்தில் ஏற்படும் வீதி விபத்துகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.