Wednesday, June 18, 2025 12:29 am
அஹமதாபாத்தில் கடந்த வாரம் நடைபெற்ற விமான விபத்துக்குப் பின்னர் மீட்புக்குழுவான கட்டுமான தொழிலதிபர் ராஜு படேலும் அவரது குழுவினரும் முதலில் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
கடுமையான தீப்பிழம்புகளை எதிர்கொண்ட போதிலும், அவர்கள் தற்காலிக ஸ்ட்ரெச்சர்கள் மூலம் காயமடைந்தவர்களை மீட்க உதவினார்கள். இடிபாடுகளில் இருந்து தங்க நகைகள், பணம், பாஸ்போர்ட்டுகள்,ஒரு பகவத் கீதை உட்பட பல பெறுமதியான பொருட்களி மீட்டனர். அவை அனைத்தும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இடிபாடுகளில் இருந்து, படேலின் குழுவினர் 800 கிராமுக்கு மேல் தங்க நகைகளையும் ₹80,000 ரொக்கத்தையும் மீட்டனர்.
மீட்கப்பட்ட அனைத்து தனிப்பட்ட உடைமைகளும் ஆவணப்படுத்தப்பட்டு வருவதாகவும், அவை நெருங்கிய உறவினர்களிடம் திருப்பித் தரப்படும் என்றும் அஹமதாபாத் இணையமைச்சர் ஹர்ஷ் சங்கவி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

