Monday, July 28, 2025 5:19 am
இந்தியாவில், 50 சதவீதத்துக்கும் அதிகமான சிறுவர்கள் வளர்ச்சி குன்றிய நிலையில் இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, 199 மாவட்டங்களில் 30 முதல் 40 சதவீதம் வரையிலான சிறுவர்கள் வளர்ச்சி குன்றியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாத நிலவரப்படி, 6 வயதுக்குட்பட்ட 8.19 கோடி சிறுவர்களில் 35.91 சதவீதத்தினர் வளர்ச்சி குன்றியவர்கள் என்பதுடன், 16.5 சதவீதமானோர் எடை குறைந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், 5 வயதுக்குட்பட்ட 37.07 சதவீத சிறுவர்கள் வளர்ச்சி குன்றிய நிலையில் இருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.


