இந்திய கிறிக்கெற் கட்டுப்பாட்டு சபையின் (பிசிசிஐ) புதிய தலைவராக முன்னாள் இந்தியகிறிக்கெற் வீரரான ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மிதுன் மன்ஹாஸ் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிசிசிஐயின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. சமீபத்திய ஆண்டுகளில் கிறிக்கெற் நிர்வாகத்தில் தீவிரமாக ஈடுபட்டுவந்த மிதுன் மன்ஹாஸ், பிசிசிஐயின் புதிய சகாப்தத்திற்குத் தலைமை தாங்க உள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் இருந்து வந்து ஐபிஎல்லில் விளையாடிய முதல் வீரர் என்ற சிறப்பையும் இவர் கொண்டுள்ளார்.
கிரிக்கெட் வீரராகவும், நிர்வாகியாகவும் அவர் பெற்றிருக்கும் நீண்ட கால அனுபவம், இந்தியகிறிக்கெற்றை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மன்ஹாஸ் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பிசிசிஐ தலைவராகப் பணியாற்றுவார்.
உள்ளூர் கிறிக்கெற்றின் தரத்தை உயர்த்துவது, வீரர் நலனைப் பாதுகாப்பது உலகக் கிண்ணப் போட்டி போன்ற முக்கியத் தொடர்களில் இந்திய கிறிக்கெற் அணியின் செயல்திறனை உறுதிசெய்வது ஆகியவை அவரது பதவிக் காலத்தின் முக்கிய இலக்குகளாக இருக்கும்.