இந்திய கிறிக்கெற் அணி அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் , மூன்று போட்டிகள் கொண் ரி20 தொடர் ஆகியவற்றில் விளையாட உள்ளது.
ஒருநாள் தொடருக்கு ஷுப்மன் கில்லும், ரி 20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ்வும் தலைமையேற்கின்றனர். ஒக்டொபர் 31 ஆம் திகதி மெல்போர்னில் நடக்கவுள்ள ரி 20 போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ளன. மெல்போர்ன் மைதானம் மொத்தம் 95000 இருக்கைகள் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ரி20யின் , முதல் போட்டி ஒக்டோபர் 29 ஆம் திகதி கேன்பராவில் நடக்கவுள்ளது. இரண்டாவது ரி20 போட்டி ஒக்டோபர் 31 அன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திலும், அதைத் தொடர்ந்து நவம்பர் 2 ஆம் திகதி ஹோபார்ட், 6 ஆம் திகதி கோல்ட் கோஸ்ட், 8 ஆம் திகதி பிரிஸ்பேன் ஆகிய நகரங்கலில் ரி20 போட்டிகல் நடைபெற உள்ளன.