புது தில்லியில் உள்ள இந்தியாவின் பாராளுமன்ற ஜனநாயக ஆராய்ச்சி , பயிற்சி நிறுவனத்தில் (PRIDE) திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்காக இந்த வார இறுதியில் இந்தியாவுக்குப் புறப்படும் 24 பங்கேற்பாளர்களைக் கொண்ட தொடக்கக் குழுவை இந்தியாவின் உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, சந்தித்தார்.
பல்வேறு அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செயலாளர் நாயகம் உட்பட இலங்கை பாராளுமன்றத்தின் 4 அதிகாரிகள் அடங்கிய மாண்புமிகு துணை சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ் தலைமையிலான குழுவை இன்று இந்திய மாளிகையில் உயர் ஸ்தானிகர் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சி 2025 மே 26-30 வரை ஒரு வாரம் நீடிக்கும். சட்டமன்ற,பட்ஜெட் செயல்முறைகள், பாராளுமன்றக் குழுக்களின் அமைப்பு மற்றும் இரு ஜனநாயக நாடுகளுக்கும் இடையிலான பிற தொடர்புடைய விஷயங்களில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளும் கூறுகள் இதில் அடங்கும்.
Trending
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!
- “ஜென்ம நட்சத்திரம்” திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு!
- ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு இத்தாலி தகுதி பெற்றது.
- இளையராஜாவிற்கு பதிலடி கொடுத்த வனிதா!
- எக்ஸ்-பிரஸ் பேர்ல் சுற்றுச்சூழல் பேரழிவை ஜனாதிபதி விசாரிக்க வேண்டும்
- காமன்வெல்த் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு தங்கம்
- பழங்குடியின மக்களுக்கு 78 ஆண்டுகளின் பின் மின்சாரம்!
- கபில்தேவ் சாதனையை முறியடித்த பும்ரா!