இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இரண்டு நாள் பயணமாக புதன்கிழமை மும்பை சென்றார். அவருடன் இங்கிலாந்து நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தொழில்துறை குழுக்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் ,பிரதிநிதிகள் உட்பட 125 பேர் கொண்ட வணிகக் குழுவும் சென்றுள்ளது.
இது இந்தியாவிற்கான மிகப்பெரிய அரசாங்க வர்த்தகப் பயணமாகும்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஜூலை மாதம் இங்கிலாந்து பயணத்தின் போது இந்தியாவும், இங்கிலாந்தும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விஜயம் முதன்மையாக வர்த்தகம் , வணிகம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது, 10 டவுனிங் ஸ்ட்ரீட் இதை “மும்பைக்கு இரண்டு நாள் வர்த்தகப் பயணம்” என்று அழைக்கிறது.
இங்கிலாந்து தூதுக்குழுவில் வர்த்தகம் மற்றும் வணிக அமைச்சர் பீட்டர் கைல் மற்றும் முதலீட்டு அமைச்சர் ஜேசன் ஸ்டாக்வுட் ஆகியோர் அடங்குவர்.