அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வரும் இந்தியர்களை கை, கால்களில் விலங்குகளுடன் அமெரிக்க விமானத்தில் ஏற்றிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றதும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வரும் வெளிநாட்டினரை வெளியேற்றும் நடவடிக்கைகள் ஈடுபட்டு வருகிறார். அவ்வாறாக கொலம்பியா நாட்டை சேர்ந்த பலரை திரும்ப அனுப்பி வைத்த அமெரிக்க ராணுவம், தொடர்ந்து இந்தியர்களையும் மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
முதற்கட்டமாக அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்ட 206 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் பஞ்சாபில் கொண்டு வந்து தரையிறக்கியது.
இந்நிலையில் தற்போது இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கை குறித்து அமெரிக்க எல்லை காவல் படைத் தலைவர் மைக்கெல் டபிள்யூ பேங்க்ஸ் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியர்கள் கை, கால்களில் விலங்குகள் பூட்டப்பட்டு அடிமைகள் போல விமானத்திற்கு அழைத்து செல்லப்படும் காட்சி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அந்த பதிவில் மைக்கெல் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதில் அமெரிக்காவின் உறுதியை தங்கள் நடவடிக்கை பறைசாற்றுவதாகவும், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் யாராக இருந்தாலும் வெளியேற்றப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கும் தொனியில் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Trending
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு
- வடக்கு மாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு
- தாவடியில் 21 வயது இளைஞன் போதை மாத்திரையுடன் கைது
- கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு
- பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகம்
- ரணிலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது : சிறைச்சாலைகள் ஆணையாளர்