இந்தியாவுக்கு விஜயம் செய்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழுவின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவுக்கான மத்திய ஆணைய அலுவலகத்தின் இயக்குநருமான சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இந்தியப்பிரதமர் மோடியை டில்லியில் சந்தித்தார்.
இந்தியாவும் சீனாவும் பண்டைய நாகரிகங்கள் என்றும், அவை நட்பு பரிமாற்றங்களின் நீண்ட வரலாற்றை அனுபவித்து வருவதாகவும், கடந்த அக்டோபரில் இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான கசான் சந்திப்பு இருதரப்பு உறவுகளின் முன்னேற்றத்திற்கும் மேம்பாட்டிற்கும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றும் மோடி கூறினார்.
இந்தியாவும் சீனாவும் போட்டியாளர்கள் அல்ல, கூட்டாளிகள் என்றும், விரைவான வளர்ச்சியை அடைவதே ஒரே குறிக்கோளாகக் கொண்டுள்ளன என்றும், பரிமாற்றங்களை அதிகரிக்கவும், பரஸ்பர புரிதலை ஊக்குவிக்கவும், ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இருதரப்பு ஒத்துழைப்பின் மிகப்பெரிய ஆற்றலையும் பிரகாசமான எதிர்காலத்தையும் உலகம் முழுவதும் உணர முடியும் என்று கூறினார்.
இந்த ஆண்டு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 75 வது ஆண்டுகளாகிறது.