இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) நிறுவனர் லலித் மோடி தனது இந்திய பாஸ்போர்ட்டை இலண்டனில் உள்ள இந்திய உயர் ஆணையரகத்தில் ஒப்படைக்க விண்ணப்பித்துள்ளதாக வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியது.
2010 ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறிய லலித் மோடி, ஐபிஎல் தலைவராக இருந்த காலத்தில் நிதி முறைகேடுகள் மற்றும் மோசடி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் இந்திய அதிகாரிகளால் தேடப்படுகிறார்.அவர், தென் பசிபிக் பகுதியில் உள்ள ஒரு சிறிய தீவு நாடான வனுவாட்டுவின் குடியுரிமையை பெற்றதாக நம்பப்படுகிறது.
ஐபிஎல் நிதி பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய பணமோசடி தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் அவரை விசாரித்து வருகிறது.
அவரது புதிய குடியுரிமையால் நாடுகடத்தல் நடவடிக்கைகள் மிகவும் சிக்கலானதாக மாறக்கூடும்.