இலங்கையர்களுக்கான பணி விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து அவற்றை மீண்டும் தொடங்குவதை விரைவுபடுத்துமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இத்தாலிய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கான இத்தாலிய தூதருடனான சந்திப்பின் போதே வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இந்த விடயத்தினை வலியுறுத்தியுள்ளார்.
இத்தாலியில் பணி விசாக்கள் நிறுத்தப்பட்டது குறித்து அமைச்சர் தூதரிடம் வினவியபோது, இத்தாலிய அரசாங்கம் பல நாடுகளுக்கு பணி விசாக்கள் வழங்குவதை மறுபரிசீலனை செய்து வருவதாகவும், இது ஒரு தற்காலிக நடவடிக்கை என்றும் இத்தாலிய தூதர் சுட்டிக்காட்டினார்.
இதேநேரம், வேலை விசாக்களை மீண்டும் வழங்குவதற்கான இலங்கையின் கோரிக்கையை தொடர்புடைய இத்தாலிய அதிகாரிகளிடம் தெரிவிக்க தூதர் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.