இலங்கையில் LOVOL அறுவடை இயந்திரங்களின் ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான DIMO நிறுவனம், பிராந்தியத்தில் LOVOL வர்த்தக நாமத்தை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு மற்றும் தமது நீண்டகால கூட்டாண்மைக்காகவும் அர்ப்பணிப்பு மற்றும் புத்தாக்கமான சந்தைப்படுத்துதலுக்காகவும், சமீபத்தில் சீனாவில் உள்ள LOVOL மையத்தில் இடம்பெற்ற 2025 WEICHAI LOVOL GLOBAL PARTNERS CONFERENCE இல், இரண்டு விருதுகளை வென்றுள்ளது.
இங்கு Loyal Partner மற்றும் Outstanding Marketing Activity Planning Award ஆகிய விருதுகளை LOVOL நிறுவனம் DIMO நிறுவனத்திற்கு வழங்கியது. இந்த மாநாட்டில் 70 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 400 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த இரண்டு விருதுகளும் இலங்கையின் விவசாயத்தின் முன்னேற்றத்திற்காக DIMO நிறுவனம் ஆற்றிய பணிகளைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. DIMO நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, DIMO நிறுவனத்தின் விவசாய இயந்திர விற்பனைத் திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் அமில டி சில்வா மற்றும் உதவி சந்தைப்படுத்தல் முகாமையாளர் மலித் ரொட்ரிகோ ஆகியோர் இந்த விசேட நிகழ்வில் கலந்து கொண்டனர்.