Thursday, January 30, 2025 5:32 pm
பிரான்ஸில் லூவர் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் மோனாலிசா ஓவியம் புதிய இடத்திற்கு மாற்றப்படவுள்ளது.உலகின் அதிக பார்வையாளர்களை கவர்ந்த லூவர் அருங்காட்சியகம் புதுப்பிக்கப்படவுள்ளமையினால் இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பார்வையாளர்கள் ஓவியத்தைப் பார்வையிட தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கட்டண மாற்றங்களும் அறிமுகப்படுத்தப்படும், எனவே ஐரோப்பிய ஒன்றியத்தில் வசிப்பவர்கள் அல்லாதவர்கள் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் கட்டணம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

