கராச்சியில் நடந்தசம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் இங்லிஸ் சதம் கைகொடுக்க, 5 விக்கெட்டில் இங்கிலாந்தை வீழ்த்தியது அவுஸ்திரேலியா.
ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடக்கிறது. நேற்று லாகூரில் நடந்த போட்டியில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா களத்தடுப்பைத் தேர்வு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தடிய அவுஸ்திரேலியா 50 ஒவர்களில் 8 விக்கெற்களை இழந்து 351 ஓட்டங்கள் எடுத்தது. 352 எனும் பிரமாண்டமான இலக்கைத் துரத்திய அவுஸ்திரேலியா 47.3 ஓவர்களில் 5 விக்கெற்களை இழந்து 356 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட், டக்கெட் ஜோடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களம் இறங்கினர். சால்ட் 10, ஜமை ஸ்மித் 15 ஓங்கங்களில் வெளியேறினர். டக்கெட், ஜோ ரூட் ஜோடி கைகொடுத்தது. மூன்றாவது விக்கெட்டுக்கு 158 ஓட்டங்கள் சேர்த்தபோது , 68 ஓட்டங்கள் எடுத்த ஜோ ரூட் ஜாம்பா சுழலில் சிக்கினார்.
ஹாரி புரூக் 3, கப்டன் பட்லர் 23 , லிவிங்ஸ்டன் 14, ஓட்டங்களிடன் ஆட்டமிழந்தனர். , அடுத்த சில நிமிடத்தில் டக்கெட் ஒருநாள் அரங்கில் 3வது சதம் கடந்தார்.(165 ஓட்டங்கள் அடித்து டக்கெட் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெற்களை இழந்து 351 ஓட்டங்கள் எடுத்தது.
352 எனும் கடின இலக்கைத் துரத்திய அவுஸ்திரேலிய அணி துவக்கத்தில் தடுமாறியது. ஹெட் 6 , கப்டன் ஸ்டீவ் ஸ்மித் 5 ஓட்டங்களுடன் வெளியேறினர். ஷார்ட், லபுசேன் இணைந்து அணியை மீட்க உதவினர். 3வது விக்கெட்டுக்கு 95 ஓட்டங்கள் அடித்தனர். 47 ஓட்டங்கள் எடுத்த அடில் ரஷித் , சுழலில் லபுசேன் சுழலில் அகப்பட்டார். மறுபக்கம் ஷார்ட் 63. கே69 அரைசதம் அடித்தனர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 146 ஓட்டங்கள் சேர்த்து கைகொடுத்தது.
ஆர்ச்சர் பந்தில் சிக்சர் அடித்த இங்லிஸ், ஒருநாள் அரங்கில் முதல் சதம் கடந்தார். இவருக்கு மேக்ஸ்வெல் ‘கம்பெனி’ கொடுக்க, வெற்றி எளிதானது. அவுஸ்திரேலிய அணி 47.3 ஓவர்களில் 5 விக்கெற்களை இழந்து 356 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இங்கிலிஸ் 120, மக்ஸ்வெல் 32 ஓட்டங்கள் எடுத்தனர்.