சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தை (USAID) கலைத்து, அதன் சுமார் 2,700 ஊழியர்களை விடுப்பில் அனுப்பும் டொனால்ட் ட்ரம்பின் திட்டத்தின் சில அம்சங்களை கூட்டாட்சி நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது.
நிர்வாகத்தின் திட்டங்களின் கீழ் சுமார் 2,200 USAID ஊழியர்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என்று நீதித்துறை அதிகாரி பிரட் ஷுமேட் நீதிபதி நிக்கோல்ஸிடம் தெரிவித்தார்.
நீதிபதியின் தடை உத்தரவு பெப்ரவரி 14 வரை அமுலில் இருக்கும் நீதிபதி நிக்கோலஸின் உத்தரவு, 2,200 தொழிலாளர்களை ஊதியத்துடன் கூடிய விடுப்பில் வைக்கும் திட்டங்களை ட்ரம்பின் நிர்வாகம் செயற்படுவதைத் தவிர்க்கிறது.
ஏற்கனவே பணிநீக்கம் செய்யப்பட்ட சுமார் 500 ஊழியர்களை இது மீண்டும் பணியில் அமர்த்துகிறது. அமெரிக்காவிற்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள USAID மனிதாபிமானப் பணியாளர்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு தடை விதிக்கப்படும்.
அடுத்த வாரம் திட்டமிடப்பட்ட விசாரணையில், நீண்ட கால இடைநிறுத்தத்திற்கான கோரிக்கையை நீதிபதி நிக்கோல்ஸ் பரிசீலிப்பார்.