உலகின் முன்னணி சைபர் பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்றான கஸ்பர்ஸ்கி (Kaspersky) வெளியிட்ட அறிக்கையில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இலங்கையும் அதிக ஆபத்து நிலை கொண்ட நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசு அமைப்புகள் முக்கிய உள்கட்டமைப்புகள், வங்கிகள், ஊடக நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைகள் ஆகியவை ஹேக்கர்கள் குறிவைக்கும் முக்கிய தளங்களாக இருக்கலாம் என அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் அரசியல் பதற்றங்கள் பன்னாட்டு மோதல்கள் அதிகரித்து வரும் சூழலில் சைபர் தாக்குதல்கள் ஒரு புதிய வகை ஆயுதமாக மாறி வருவதனால் இலங்கையும் தனது டிஜிட்டல் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டியது அவசியம் எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.