ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் தெரிவுசெய்யப்பட்டுள்ளர்.
சிங்கப்பூரிலிருந்து வெளியிடப்படும் முன்னணி ‘ஆசிய விஞ்ஞானி’ எனும் சஞ்சிகை இன் ‘ஆசிய விஞ்ஞானி; - 100 பட்டியலில் இவர் இடம் பெற்றுள்ளார்.
ஆண்டுதோறும் வெளியிடப்படும் இந்த பட்டியல், ஆசியாவிலுள்ள தலைசிறந்த விஞ்ஞானிகளின் விசேட சாதனைகளை அங்கீகரிக்கிறது. இந்த பட்டியலில் தேர்வு செய்யப்படும் தலைசிறந்த விஞ்ஞானிகள், அவர்களின் தரமான ஆய்வு வெளியீட்டுக்கப்பால் தேசிய அல்லது சர்வதேச விருதை பெற்றிருக்க வேண்டும். பதிலாக முக்கியமான விஞ்ஞான கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டிருக்க வேண்டும் அல்லது கல்விசார் அல்லது தொழில்சார் தலைமைத்துவத்தை வழங்கியிருக்க வேண்டும்.
விஞ்ஞானப் பீடாதிபதியாக கடந்த ஜந்து ஆண்டுகள் பணியாற்றிவரும் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் பல தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவற்றில், துணைவேந்தர்கள் இயக்குனர்கள் சபையினரால் வழங்கப்பட்ட பௌதிக விஞ்ஞானத்திற்கான அதி சிறந்த இள ஆராய்ச்சியாளர் விருது, தேசிய விஞ்ஞான மன்றத்தினால் வழங்கப்பட்ட இள விஞ்ஞானி விருது ,தேசிய ஆராய்ச்சி பேரவை பல தடவைகள் வழங்கிய சிறந்த ஆராய்ச்சி வெளியீட்டுகளுக்கான ஜனாதிபதி விருதுகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவரின் ஆய்வுக் கட்டுரைகள் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளால் அதிகளவு மேற்கோளிடப்பட்டு வருகின்றன.
Trending
- ஆசியாவின் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக யாழ்ப்பாண பேராசிரியர் தெரிவு
- பொலிஸாரைக் கடித்த பூனை கைது
- மூத்த மகனை கட்சியிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் நீக்கினார் லாலு
- மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு மே 28 ஆம் திகதி
- ஐக்கிய மக்கள் சக்தி தலைவர்கள் வெளியேற்றம்
- நீரிழிவுநோய் நூல் வெளியீட்டு விழா
- ஆழ்மனப் பதிவுகளும் யோகமும்
- கிளிநொச்சியில் ரயில் மோதி இளம் குடும்பஸ்தர் பலி