17 ஆவது ஆசியக் கிண்ண கிறிக்கெற் தொடர் இன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆரம்பமாகிறது. அபுதாபியில் ஆரம்பமாகிறது. ரி20 வடிவத்தில் நடைபெறும் இப்போட்டித் தொடர் எதிர் வரும் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை அபுதாபி, துபாய் ஆகிய மைதானங்களில் நடைபெறும்
‘A’ பிரிவு:
இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் ,ஓமான்.
‘B’ பிரிவு:
ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை ,ஹொங்கொங்
அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் இரவு 8 மனிக்கு நடைபெறும் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் ஹொங்கொங் அணியை எதிர்கொள்கிறது.
2025 ஆசியக் கிண்ண முதல் போட்டிக்கு வானிலை சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அபுதாபியில் இன்று போட்டி நடைபெறும் நேரத்தில் வானம் தெளிவாகக் காணப்படும். மழைக்கான வாய்ப்பு முற்றிலும் இல்லை என்பதால், ரசிகர்கள் ஒரு முழுமையான கிரிக்கெட் போட்டியை எதிர்பார்க்கலாம். வெப்பநிலை 30 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம், மேலும் காற்றில் ஈரப்பதம் அதிகமாகக் காணப்படும். இது பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக அமையக்கூடும்.
ஆசியக் கோப்பை வரலாற்றில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள ஹொங்கொங், ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை என்ற சோகமான சாதனையை வைத்துள்ளது. அந்த அணி ஆப்கானிஸ்தானை கடைசியாக 2015-ல் தோற்கடித்தது. ஆனால், அதன்பிறகு ஆப்கானிஸ்தான் அணி கிரிக்கெட்டில் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
சுழற்பந்து வீச்சில் பலம் வாய்ந்த ஆப்கானிஸ்தான் அணியைச் சமாளிப்பது,ஹொங்கொங்கிற்குப் பெரும் சவாலாக இருக்கும். தொடக்க ஆட்டக்காரர் அன்ஷுமன் ரத் சிறப்பாக விளையாடினால் மட்டுமே ஹாங்காங் அணி இந்தப் போட்டியில் சவால் விடுக்க முடியும். மறுபுறம், ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நூர் அஹ்மத் என உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களுடன் ஆப்கானிஸ்தான் வலுவாக இருக்கிறது.