ஆக்ராவில் உள்ள கே.எச்.எஸ்ஸில் (கே.எச்.எஸ்) நடைபெறவிருக்கும்ஹிந்தி ஆசிரியர் பயிற்சித் திட்டத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 35 ஹிந்தி ஆசிரியர்களைச் சந்தித்து உரையாடினார். இலங்கை முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த ஹிந்தி ஆசிரியர்களுக்கான முதல் பயிற்சித் திட்டம் இதுவாகும். இந்த பயிற்சித் திட்டம், கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கலாச்சாரப் பிரிவான சுவாமி விவேகானந்தா கலாச்சார மையத்தால் (எஸ்.வி.சி.சி) ஆக்ராவில் உள்ள கே.எச்.எஸ்ஸுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை முழுவதும் மொத்தம் 88 பாடசாலைகளில் தற்போது ஹிந்தி ஒரு பாடமாக உள்ளது. ஹிந்தி மொழி கற்பித்தல் , கலாச்சார புரிதலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த மதிப்புமிக்க பயிற்சித் திட்டத்தில் பங்கேற்க இலங்கை அரசின் கல்வி அமைச்சு அரசுப் பாடசாலைகளில் இருந்து ஹிந்தி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.
இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு முதன்மை நிறுவனமான ஆக்ராவில் உள்ள கே.எச்.எஸ்.-இல் ஆசிரியர்கள் தீவிர பயிற்சி பெற உள்ளனர், இது உலகளவில் ஹிந்தி மொழியை மேம்படுத்துவதற்கும் கற்பிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பயிற்சியின் போது, கலாச்சார ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களுக்கு ஆசிரியர்களுக்கான வருகைகளை நிறுவனம் ஏற்பாடு செய்யும்.