Saturday, June 14, 2025 7:16 am
அஸ்வெசும பணத்தை மோசடி செய்ததற்காக பிரதேச செயலகம் ஒன்றின் பெண் அதிகாரி ஒருவரை பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவு கைது செய்துள்ளது.
கொலொன்ன பிரதேச செயலகத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் 4.1 மில்லியன் ரூபா அஸ்வெசும பணத்தை மோசடி செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் நிதி குற்றப் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

