இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் முன்னாள் மக்கள் தொடர்பு பணிப்பாளர் அருட்தந்தை பெனடிக்ட் ஜோசப் பெர்னாண்டோ நித்திய இளைப்பாறினார் .
சிறிது காலமாக நோய்வாயப்பட்டிருந்த நிலையில், ஹேவ்லொக் பகுதியில் கத்தோலிக்க திருச்சபையின் Evening Stars என்ற ஓய்வூதிய இல்லத்தில் தனது இறுதி நாட்களைக் கழித்த போது அவர் நித்திய இளைப்பாறியுள்ளார்.
நித்திய இளைப்பாறியுள்ள அருட்தந்தையின் இறுதி ஆராதனை நிகழ்வுகள் நடைபெறும் தினம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.