அரசால் வழங்கப்பட்ட விஜேராம வீதியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்தார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த.
மஹிந்தவும் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவும் இன்று வியாழக்கிழமை (11) பிற்பகல் 1:15 மணிக்கு வீட்டிலிருந்து வெளியேற்றினர். அவர்களை வழியனுப்ப ஏராளமானோர் கூடியிருந்தனர்.
ராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை [10]நிறைவேற்றப்பட்ட முன்னாள் ‘ஜனாதிபதிகள்’ உரித்துரிமைகள் (ரத்து) சட்டம்’க்கு பதிலளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டம் அனைத்து முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் ஜனாதிபதி இறந்தால் அவரகளது மனைவிகளுக்கும் , அரசு நிதியளிக்கும் பிற வசதிகளுடன், உத்தியோகபூர்வ இல்லங்களின் உரிமையை இரத்து செய்கிறது.
மைத்திரிபால சிறிசேன , சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் இந்த சட்டம் பொருந்தும் என்று பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்கள் தங்கள் உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் கையளிக்க வெண்டும்.