அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) பிரதிநிதிகள் இன்று புதன்கிழமை[5] முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அவருடைய அலுவலகத்தில் சந்தித்தனர்.
தற்போது வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்ட இந்த கலந்துரையாடலில் GMOAவின் தலைவர் டொக்டர் சஞ்சீவ தென்னகோன், GMOAவின் செயலாளர் டொக்டர் பிரபாத் சுகததாச மற்றும் பல GMOA பிரதிநிதிகள் கலந்துகொண்டதாக ஐதேக ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவர் வஜிர அபேவர்தன, முன்னாள் ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் எஸ். சமரதுங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.
முன்னாள் ஜனாதிபதி போன்ற அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி தற்போதைய பாராளுமன்றத்திற்குத் தேவை என்று கூறி, GMOA பிரதிநிதிகளும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
இதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தற்போது தனது ஓய்வை அனுபவித்து வருவதாகவும், ஆனால் GMOA க்குத் தேவையான எந்தவொரு ஆதரவையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.