Thursday, January 30, 2025 10:57 pm
உள்ளூர் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், இராணுவ ஹெலிகொப்ரரும் நடுவானில் மோதிக்கொண்டதில் அதில் பயணம் செய்த 64 பயணிகளும் இறந்திருக்கலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.
இந்த விபத்து வாசிங்டன், ரீகன் விமான நிலையத்தில் இறங்குவதற்கு முன்பதாக ஏற்பட்டது. விமானத்தின் பாகங்கள் உறைநிலையுடன் கூடிய பொற்ரோமக் ஆற்றில் வீழ்ந்துள்ளன.
இந்த விபத்து வெள்ளை மாளிகையில் இருந்து மூன்று மைல் தொலைவில் இடம்பெற்றுள்ளது. விபத்து நடந்த வேளையில் வானம் தெளிவாக இருந்துள்ளது.
விமானத்தில் பயணம் செய்தவர்களில் இரு பதின்ம வயது உள்ளக பனிச்சறுக்கு நடன விளையாட்டு (Figure skating) வீரர்கள் உட்பட மொத்தம் 14 வீரர்களும் அவர்களுடைய ரஷ்ய பயிற்சியாளர்களும் அடங்கியிருந்தனர்.

